சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நவ.15 முதல் ஹெலிகாப்டரில் போகலாம்

9:30 AM Chipsan Aviation 0 Comments


சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை நவ 16ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். சபரிமலைக்கு பெரும்பாலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளது. விமானத்தில் செல்பவர்கள் கொாச்சி அல்லது திருவனந்தபுரத்தில் இறங்கி பின்னர் சாலை வழியாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்.

கொச்சியில் இருந்து சபரிமலைக்கு 200 கிமீ தூரமும், திருவனந்தபுரத்தில் இருந்து 125 கிமீ தூரமும் உள்ளது. இதனால் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் சபரி்மலைக்கு உடனடியாக வர ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.


இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவநத்தின் சார்பில் கொச்சியில் இருந்து சபரி்மலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த வருடமும் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி முதல் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது. சன்டோஸ் கிங் என்ற நிறுவனம் சார்பில் இந்த ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட உள்ளன. இதில் 5 பேர் பயணம் செய்யலாம். சபரிமலையில் இருந்து 40 கிமீ தொலைவிலுள்ள பெருமேடு என்ற இடத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கார் மூலம் பக்தர்கள் சபரிமலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

கொச்சியில் இருந்து சபரிமலைக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் கட்டணம் ஆகும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் 18 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் இயக்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



0 comments: